Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 10 April 2014

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுப்பதிவு சதவீதம் தெரிவிக்க ஏற்பாடு

ஓட்டுப்பதிவு நாளில், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, ஓட்டுப்பதிவு சதவீதத்தை ஓட்டுச்சாவடி அலுவலர்கள், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும், இம்மாதம் 24ல், ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு நாளில், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, ஓட்டுப்பதிவு சதவீதத்தை, ஓட்டுப்பதிவு அலுவலர்கள், உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில், தேர்தல் பார்வையாளர் மட்டும் மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்; கலெக்டர் கூட, மொபைல் போன் எடுத்து செல்ல முடியாது. இன்று அல்லது நாளை, வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது. இறுதி பட்டியல் வெளியானதும், 'பூத் சிலிப்' அச்சிடும் பணி துவக்கப்படும். பொதுமக்களிடம் இருந்து, 8,615 புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment