Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 4 April 2014

தேர்தல் பணி: பெண் ஊழியர்களுக்கு சிறப்பு வசதிகள்


மூணாறு: இடுக்கியில், தேர்தல் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர்களுக்கு, பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொகுதியில் பதட்டமான ஓட்டுச் சாவடிகளில் பெண் ஊழியர்கள் பணியமர்த்தப்பட மாட்டார்கள். நகர் புறம் மற்றும் அதிக போக்குவரத்து வசதி உள்ள பகுதிகளில் பெண் ஊழியர்கள் அதிகமாக தேர்தல் பணிக்கு நியமிக்கப்படுவார்கள். தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஓட்டுப் பதிவு அதிகாரிகளின் நலன் கருதி, ஓட்டு பதிவு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனங்களுடன், சிறப்பு மருத்துவ குழுவினரும் உடன் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை மாவட்ட கலெக்டரும், தொகுதியின் தேர்தல் அதிகாரியுமான அஜித்பாட்டில் தெரிவித்தார்

No comments:

Post a Comment