Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 4 April 2014

விடைத்தாள் திருத்தும் மையத்தில் தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்பு


மதுரையில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்களுக்கு தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, அதுதொடர்பான பணிகளில் ஊழியர்கள் கண்டிப்பாக பங்கேற்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மதுரை வடக்கு சட்டசபை தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நாளை( ஏப்.,5) நடக்கிறது. இந்நிலையில், பிளஸ்2 பொதுத் தேர்வு முடிந்து, விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணியும் முக்கியமானது என்பதால், தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் ஈடுபடுவது சிரமமாக இருந்தது. இதுகுறித்து கலெக்டர் சுப்ரமணியனிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் மையத்திலேயே, ஆசிரியர்களுக்கு தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்பை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். கோசாகுளம் சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளியில், விடைத்தாள் திருத்தும் மையம் செயல்படுகிறது. இங்கு மதுரை வடக்கு சட்டசபை தொகுதி தேர்தல் பணியாளர்களுக்கு நேற்று சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.
ஆர்.டி.ஓ., ஆறுமுகநயினார், தாசில்தார் சத்தியசீலன், தேர்தல் ஊழியர்கள் ரவி, முத்துலட்சுமி, முத்துகிருஷ்ணன் உட்பட பலர் பயிற்சியில் பங்கேற்றனர். விடைத்தாள் திருத்தும் மையத்தில் 250 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment