திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைக்கல்வி மையத்தின் மூலமாக முதுகலை கல்வியியல் பாடத்திட்டம் (எம்.எட்) தொடங்க தேசியக் கல்விக்குழுமம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக தொலைக்கல்வி மைய இயக்குநர் கே. ஆனந்தன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:
பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைக்கல்வி மையத்தில் முதுகலை கல்வியியல் பாடத்திட்டத்தை துவங்குவதற்கு தென் மாவட்டங்களுóககான தேசியக் கல்விக் குழுமம் சென்ற மாதம் ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வைத் தொடர்ந்து, மார்ச் 1-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற கல்விக் குழுமத்தின் கூட்டத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் முதுகலை கல்வியியல் பாடத்திட்டத்தை 2014-15-ம் கல்வியாண்டில் தொடங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள எம்.எட். படிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஊக்க ஊதியமும், பதவி உயர்வு பெறுவதற்கும் வாய்ப்பாக
அமையும். அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் இளம் கல்வியியல் முடித்து, 2ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
அரசின் விதிகளுக்குள்பட்டு சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு - 0431- 2407027, 2407054.
No comments:
Post a Comment