விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அங்கன்வாடி மையத்தில் சமையலுக்கு சிலிண்டர் பற்றவைக்கும் போது திடீரென வெடித்து தீப்பற்றியது. இதனால் அப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள புதுசெந்நெல்குளம் (பி.ராமச்சந்திராபுரம்) கிராமத்தில் அரசுப் பள்ளிக்குப் பின்புறம் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் உள்ளது. செவ்வாய்கிழமை மையத்தில் 25 குழந்தைகள் இருந்துள்ளனர். குழந்தைகளுக்கு சமைப்பதற்காக, சமையலர் சிலிண்டரை பற்றவைத்துள்ளார். அப்போது ரெகுலேட்டரில் உள்ள வாசர் பழுதடைந்து இடைவெளி இருந்துள்ளது.
இதனைக் கவனியாமல் சமையலர் பற்ற வைத்துள்ளார். இதனையடுத்து அடுப்பிற்குச் செல்லும் டியூப் மற்றும் ரெகுலேட்டர் தீப்பற்றியது. இதனையடுத்து குழந்தைகளை அவசரமாக பொறுப்பாளர் தங்ககுரு வெளியே அழைத்துச் சென்றுவிட்டார். இதனால் மையத்தில் பதற்றம் ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புப் படையினருக்கு தகவல் கிடைத்து விரைந்து வந்து தீயை முழுவதுமாக அனைத்தனர். மையத்தின் பொறுப்பாளர் மற்றும் சமையலரின் கவனக் குறைவே இத் தீ விபத்திற்குக் காரணம் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment