Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 5 March 2014

அரசு ஊழியர்களுக் கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களின் பெற்றோ ருக்கும் பயனளிக்கும் விதத்தில் மாற்றியமைத்திட வேண்டும்-ஆசிரியர் சங்கம் கோரிக்கை


தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் இளமாறன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா வது:
ஆசிரியர், அரசு ஊழியர்களுக் கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களின் பெற்றோ ருக்கும் பயனளிக்கும் விதத்தில் மாற்றியமைத்திட வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும், நல்லாசிரியர் விருதுக்கான தொகையை உயர்த்தித் தர வேண்டும்.
போலிச் சான்றிதழ் மூலம் பணிபுரிவோரைக் கண்டறிந்து அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும், கல்வி கற்பதில் மாணவர்களிடம் பாகுபாடு ஏற்படாமல் தடுக்க, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்தினைக் கலைத்துவிட்டு, மெட்ரிக் பள்ளி களின் பெயர்களை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் அல்லது சுயநிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment