தேர்வு நாளன்று தபால் துறையினரிடம் குறிப்பிட்ட நேரத்துக்குள் பார்சலை ஒப்படைப்பதற்காக தேர்வு கண்காணிப்பாளர்கள் பதற்றத்தோடு இருப்பார்கள். இப்போது எங்களது வாகனங்களிலேயே விடைத்தாள்களை மாவட்ட மையங்களுக்கு எடுத்துச்செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
விடைத்தாள்களை எடுத்துச்செல்ல ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேக வாகனங்கள் பணியமர்த்தப்பட்டன. விடைத்தாள்களை மாவட்ட மையங்களுக்கு மாலை 6 மணிக்குள் கொண்டுவந்தால் போதும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, பதற்றமில்லாமல் விடைத்தாள்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு மையங்களுக்குக் கொண்டுவரப்பட்டதாக தேவராஜன் கூறினார்.
No comments:
Post a Comment