Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 4 March 2014

ஓட்டு பதிவு ஒப்புகைச் சீட்டு: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் செயல்படுத்தப்பட திட்டம்


 
நாம் செலுத்திய ஓட்டு யாருக்கு பதிவாகியுள்ளது என்பதை வாக்காளர்கள் உறுதிசெய்துகொள்ளும் விதமாக ஒப்புகைச் சீட்டு திட்டத்தை தேர்தல் ஆணையம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அறிமுகப் படுத்துகிறது. தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் சோதனை முயற்சியாக சில தொகுதிகளில் மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து, அது அறிமுகப் படுத்தப்பட்டதில் இருந்தே மாறுபட்ட கருத்துகள் கூறப்படுகின்றன. எந்த பொத் தானை அழுத்தினாலும் ஒருவருக்கே ஓட்டு கள் பதிவாகும் வகையில்கூட மாற்றங்கள் செய்ய முடியும் என்றும் சிலர் சந்தேகம் கிளப்பினர்.
இதனால், நாம் செலுத்திய வாக்கு யாருக்கு பதிவானது என்று உறுதி யாக தெரியாத நிலையே இருந்து வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் நூறு சதவீதம் நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை நிரூபிக்கும் விதமாக, ஒவ்வொரு வாக்காளரும் தமது ஓட்டை பதிவு செய் ததும் ஒப்புகைச்சீட்டு வழங்கப்பட வேண் டும் என்ற கருத்தும் ஆரம்பம் முதலே வலியுறுத்தப்பட்டு வருகிறது. பிரத்யேக இயந்திரங்கள் இந்நிலையில், சோதனை முயற்சியாக வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஒப்புகைச்சீட்டு திட்டத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ‘ஓட்டர் வெரிஃபையபிள் பேப்பர் ஆடிட் டிரயல் சிஸ்டம்’ எனப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த இயந்திரங்களில் வாக்கைச் செலுத்தியதும், நாம் வாக்கு செலுத்திய வரிசை எண் ஒளிரும். உடனே, அதைக் குறிக்கும் வகையில் ரசீதும் வெளியே வரும். இதுகுறித்து தேர்தல் துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: நாட்டில் பல்வேறு இடங்களில் நடை பெற்ற இடைத்தேர்தல்களில் இந்த இயந்திரங்களை தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது. ஏற்காடு இடைத் தேர்தலிலும் இதை அறிமுகப்படுத்த எண்ணினோம். சில காரணங்களால் கைவிடப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் இதைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆனால், குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் பயன்படுத்தப்படும். தமிழகத்திலும் சில தொகுதிகளில் மட்டுமே சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகு, அந்த தொகுதிகள் பட்டியல் தயாரிக் கப்படும். இவ்வாறு தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வரும்.. ஆனா வராது! ‘‘ஒப்புகைச் சீட்டு தரப்படுவதால், வாக்காளர்கள் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டார்கள் என்பது தெரியும். மாற்றுக் கட்சியினரால் அவர்களுக்கு ஆபத்து நேராதா?’’ என்று கேட்டதற்கு அதிகாரிகள் கூறியதாவது: ஒப்புகைச்சீட்டு வெளியே வருமே தவிர, ரசீது போல கையில் எடுத்துக்கொள்ள முடியாது. அச்சிடப்பட்ட சீட்டு வெளியே வந்ததும், நம் ஓட்டு யாருக்கு பதிவாகியுள்ளது என்ற தகவலைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். உடனே அந்த சீட்டு இன்னொரு பெட்டிக்குள் விழுந்துவிடும். தேர்தல் பிரச்சினை காரணமாக வழக்கு போடப் பட்டால், ஒப்புகைச்சீட்டு சிறந்த அத்தாட்சி யாக விளங்கும்’’ என்றனர். இத்திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த 13 லட்சத்துக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் ரூ.1692 கோடியில் கொள் முதல் செய்யப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment