Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 4 March 2014

தேர்வுப் பணிகள் மிகவும் எளிமையாகிவிட்டதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்துள்ளார்

பொதுத்தேர்வின் போது மாணவர்களுக்கு தேர்வறைகள் ஒதுக்கீடு செய்வது, தேர்வறைகளுக்கான வினாத்தாள்களைப் பிரித்து வழங்குவது, விடைத்தாள்களில் முத்திரையிடுவது போன்ற பல்வேறு பணிகள் தேர்வுக்கு முன்னதாக மேற்கொள்ளப்படும். எனவே, தேர்வு மையங்கள் பரபரப்பாக இருக்கும்.
ஆனால், இந்த ஆண்டு தேர்வின்போது வேலைப்பளுவையும், தவறுகளையும் குறைப்பதற்காக புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதனால், தேர்வுப் பணிகள் மிகவும் எளிமையாகிவிட்டதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:
மாணவர்களுக்கு தேர்வறைகள் ஒதுக்கீடு, ஒரு கவரில் 20 வினாத்தாள்கள் என பிரித்து வழங்கியது போன்ற நடவடிக்கைகளால் தேர்வுப் பணியில் ஈடுபடுவோரின் வேலைப்பளு பெருமளவு குறைந்துள்ளது. எனவே, பல தேர்வு மையங்களில் கண்காணிப்புப் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த முடிந்ததாக தேர்வு கண்காணிப்பாளர்கள் எங்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment