Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 3 March 2014

5% மதிப்பெண் தளர்த்தி வழங்கிய அரசாணையை இரத்து செய்ய கோரி டி.ஆர்.பி., முன் ஆர்ப்பாட்டம்

இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முன் சுமார் 150க்கும் மேற்பட்ட  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குவிந்தனர். அவர்கள் 5% மதிப்பெண் தளர்த்தி வழங்கிய அரசாணையை இரத்து செய்ய கோரிக்கை வைத்தனர். காலை 10.30மணிக்கு அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது, ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை.

இதையடுத்து உடனடியாக அவர்களை வெளியேற்ற 2வேன்கள் நிறைய போலீஸ் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோனர் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள். அதேபோல் ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்தவர்களை முதலில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை இரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்பொழுது டி.ஆர்.பி., சார்பில் அரசாணை இரத்து செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டது.

No comments:

Post a Comment