Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 3 March 2014

தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, அரசின் ஆணை பெற்றவுடன் நடத்த தயார் - தொடக்கக் கல்வி இயக்குனர் உறுதி

இன்று SSTA சங்கத்தை சேர்ந்த மாநில பொறுப்பாளர்கள் தொடக்கக் கல்வி இயக்குனரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு  2013-14ஆம் கல்வியாண்டுகான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் மாவட்ட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்தமாறு வலியுறுத்தப்பட்டது. அப்பொழுது தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் கலந்தாய்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன எனவும், அரசின் அனுமதிகாக காத்திருப்பதாகவும், அனுமதி வந்த உடன் ஒரே நாளில் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதுகுறித்து அரசு உடனடியாக உரிய ஆணை பிறப்பிக்க வலியுறுத்தி நாளை சங்க மாநில பொறுப்பாளர்கள், உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக சங்க மாநில பொறுப்பாளர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். மேலும் அதற்குள் தேர்தல் அறிவிப்பு வராமல் இருப்பது நல்லது என்று மாநில பொதுச் செயலாளர் திரு.இராபர்ட் தெரிவித்தார்.

No comments:

Post a Comment