Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 3 March 2014

53 லேப்டாப்கள் திருட்டு-ரூ 8.5 லட்சம் கட்ட பள்ளிகல்வி துறை உத்தரவு -மதுரை உயர் நீதிமன்றத்தை நாடினார் தலைமை ஆசிரியை

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  கடந்த ஆண்டு அக்டோபர் 1 ம் தேதிகாலை சுமார்  4.30 மணியளவில் 53 லேப் டாப்கள் திருடபட் டிருந்தது.இது தொடர்பாக அன்றையதினமே அப்பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ் .அம்சவேணி கடத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.ஆனால் பிப்ரவரி 12ம் தேதி திருடப்பட்ட லேப் டாப் களுக்கு ரூ 8,47,470 கட்ட வேண்டும் என பள்ளி கல்வி துறையிடமிருந்து  தலைமை ஆசிரியைக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.தலைமை ஆசிரியை சில மாதங்களில் பணி  ஓய்வு பெறவுள்ள தால் பள்ளிகல்வி துறையின் உத்தரவை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார் .

No comments:

Post a Comment