Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 4 March 2014

மத்திய பல்கலைகளில் 5,707 ஆசிரியர் பணியிடங்கள் காலி


தமிழகம் உட்பட, நாடு முழுவதும் உள்ள, மத்திய பல்கலைகளில், 5,707 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழுள்ள, மத்திய உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், நாடு முழுவதும், 42 மத்திய பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில், கடந்த, தி.மு.க., ஆட்சியில், திருவாரூரில் மத்திய பல்கலை துவக்கப்பட்டது.

மேலும், சென்னை அருகில் உள்ள, கடல் சார் பல்கலையும், மத்திய பல்கலை வரிசையில் இணைந்தது. மத்திய பல்கலைகள், மாநிலங்களின் பல்கலைகள், நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் வரிசையில் இல்லாமல், தனித்துவம் பெற்றவையாக திகழ்கின்றன. கடந்த, ஜனவரி மாத நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள, 42 பல்கலைகளில், திருவாரூர் மத்திய பல்கலை உட்பட, 39 பல்கலைகளில், பேராசிரியர், இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் என, 5,707 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தமிழகத்தின், திருவாரூர் மத்திய பல்கலையில், நிர்ணயிக்கப்பட்ட, 151 பணியிடங்களில், இரண்டு பேராசிரியர்கள், ஐந்து இணை பேராசிரியர்கள், 21 துணை பேராசிரியர்கள் என, 28 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மேலும், 20 பேராசிரியர்கள், 38 இணை மற்றும் 65 உதவி பேராசிரியர்கள் என, 123 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், சமீபத்தில், 77 பணியிடங்களுக்கு, தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, டில்லி பல்கலையில், 953 பணி இடங்கள், காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment