Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 4 March 2014

மாணவியின் புகைப்படம் மாற்றம் : தேர்வு மையத்தில் குழப்பம்


கோவை தேர்வு மையத்தில், தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரின் புகைப்படம் மாறியிருந்ததால், குழப்பம் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும், பிளஸ் 2 தேர்வு, நேற்று துவங்கியது. கோவை, கணபதி, சி.எம்.எஸ்., மேல்நிலைப் பள்ளியில், தேர்வு எழுத வந்த, தனித்தேர்வு மாணவி ஒருவரின் வருகை பதிவேடு, விடைத்தாள், டாப் ஷீட் மற்றும் ஹால் டிக்கெட்டில் புகைப்படம் மாறியிருந்தது. இதனால், அறை கண்காணிப்பாளர் உட்பட அனைவரும் குழம்பினர். இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதன்மை கல்வி அதிகாரி அறிவுறுத்தலின் படி, மாணவியின் பிற சான்றிதழ்கள் பரிசோதிக்கப்பட்டு, மாணவியிடம் உறுதி சான்றொப்பம் பெற்று, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, ஞானகவுரி கூறுகையில், தனித்தேர்வர் என்பதால், மாணவி கவனிக்காமல் இருந்துள்ளார். மாணவியின் பிற சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்து, தேர்வெழுத அனுமதிக்கப்பட்டது. இவரின், அனைத்து விவரங்களும் இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். விவரங்களை பதிவு செய்ததில் ஏற்பட்டுள்ள பிழை காரணமாகவே, புகைப்படம் மாறியுள்ளதாக தெரிகிறது, என்றார். 

No comments:

Post a Comment