பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவியிடம், சில்மிஷம் செய்த அரசு பள்ளி ஆசிரியரை, மாவட்ட கல்வித் துறை, தேர்வு பணியில் இருந்து நீக்கம் செய்துள்ளது. தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத்தேர்வு, நேற்று முன்தினம் துவங்கியது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், தேர்வு எழுதிய மாணவியை, அங்கு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட, காரைக்குறிச்சி புதூர், அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முத்துக்குமரன், முதுகை தடவி, சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, அந்த மாணவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், குமாரிடம் புகார் செய்தார். விசாரணையில், ""தவறுலதாக, மாணவியின் மீது கை பட்டு விட்டது; அதற்கு, சம்பவ இடத்திலேயே வருத்தம் தெரிவித்துவிட்டேன், என, முத்துக்குமரன் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், சர்ச்சையில் சிக்கிய முத்துக்குமரனை, மாவட்ட பள்ளிக்கல்வி துறை, தேர்வு பணியில் இருந்து நீக்கம் செய்துள்ளது.
No comments:
Post a Comment