Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 5 March 2014

டி.இ.டி., முதல் தாள் தேர்ச்சி - சான்றிதழ் சரிபார்ப்பு எங்கே?

டி.இ.டி., தேர்வில் 5% மதிப்பெண் சலுகை அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களில், முதல் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, தமிழகம் முழுவதும் 5 மண்டலங்களில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு மண்டலத்திலும் பல மாவட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. முதல் தாளில்(PAPER - I) தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் மண்டலங்கள் மற்றும் உள்ளடக்கப்பட்ட மாவட்டங்களின் விபரம்,
மதுரை மண்டலம்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் இடம்
MRR MAVMM மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அண்ணா பேருந்து நிலையம் அருகில்,
மதுரை - 20
போன் - 0452 - 2531754

திருச்சி மண்டலம்
அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் இடம்
ATMRCM Vasavi வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
எண்-11, பேர்ட்ஸ் சாலை, கன்டோன்மென்ட், திருச்சி - 620001.
போன் - 0431 - 2416648

சேலம் மண்டலம்
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் இடம்
சாரதா பாலமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
ராஜாஜி சாலை, சேலம் - 7.
போன் - 0427 - 2412160.

கும்பகோணம் மண்டலம்
திருவாரூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் இடம்
ஸ்ரீ மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
கும்பகோணம் பேருந்து நிலையம் அருகில்,
கும்பகோணம்.
போன் - 0435 - 2431566.

சென்னை மண்டலம்
கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் இடம்
ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
எண்-319, ஜி.எஸ்.டி., சாலை,
குரோம்பேட்டை, சென்னை - 44.

போன் - 044 - 22417714.

No comments:

Post a Comment