எச்.ஐ.வி. தொற்றுக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு, பாகுபாடின்றி பள்ளிகளில் அடிப்படைக் கல்வி அளிக்கப்படுகிறதா? என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
எச்.ஐ.வி. பாதிப்புள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் சேர அனுமதி மறுக்கப்படுவதாகவும், அவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாகவும் கூறி, நாஸ் பவுண்டேஷன் என்ற தன்னார்வ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தது.
மாணவர்களின் எச்.ஐ.வி. பாதிப்பு பற்றிய விவரங்கள், ரகசியம் காக்கப்படவேண்டிய நிலையில், விதிமுறைகளை மீறி பள்ளிகள் அவர்களை புறக்கணிப்பதாகவும், பாகுபாடு காட்டி இழிவுபடுத்துவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி பி.எஸ்.செளகான் அடங்கிய அமர்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், எச்.ஐ.வி. பாதிப்புள்ள மாணவர்களுக்கு, கல்வி உரிமைச் சட்டத்தின்படி, எந்தவிதப் பாகுபாடுமின்றி கல்வி அளிக்கப்படுகிறதா? என்பது குறித்து விளக்கம் கேட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment